THULASI TEA / துளசி டீ
...
Nutrition Information
- Calories: 1.38.
- Protein: 0.189 grams.
- Fat: 0.038 grams.
- Carbohydrates: 0.159 grams.
- Fiber: 0.096 grams.
- Sugar: 0.018 grams.
...
Nutrition Information
- Calories: 1.38.
- Protein: 0.189 grams.
- Fat: 0.038 grams.
- Carbohydrates: 0.159 grams.
- Fiber: 0.096 grams.
- Sugar: 0.018 grams.
சுவாச கோளாறு பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள துளசி டீ பருகி வரலாம். இது சளி, இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து காக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.
மன அழுத்தம் தோன்றுவதற்கு காரணமான கார்டிசால் ஹார்மோன் அளவை சீராக பராமரிப்பதற்கு துளசி டீ பருகுவது நல்லது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
துளசி டீ பருகும்போது கார்டிசால் அளவு குறைகிறது. இதனால் மன அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. மேலும் மன நலன் சார்ந்த வேறு பல அறிகுறிகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கிறது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துவதிலும் துளசி டீ முக்கிய பங்கு வகிக்கிறது.
பற்களின் ஆரோக்கியம் காப்பதிலும் துளசி டீயின் பங்களிப்பு இருக்கிறது. தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிடம் இருந்து பற்களையும், நுண்ணுயிரி கிருமிகளிடம் இருந்து வாய் பகுதியையும் பாதுகாக்க உதவுகிறது. வாய் துர்நாற்றத்தையும் தடுக்கிறது.
கை, கால்களின் மூட்டு இணைப்பு பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்வதற்கு துளசி எண்ணெய்யை பயன்படுத்தலாம். செரிமான கோளாறு பிரச்சினைகளை சரிசெய்யவும் துணை புரிகிறது.
துளசி டீயை வீட்டிலேயே சுலபமாக தயார் செய்து பருகலாம். வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் நான்கு, ஐந்து துளசி இலைகளை போட்டு கொதிக்கவைக்க வேண்டும். மூன்று நிமிடங்கள் கழித்து நீரை வடிகட்டி டம்ளரில் ஊற்ற வேண்டும். அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம். இதேபோல் துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் ஏலக்காய், இஞ்சி சேர்த்தும் ருசிக்கலாம்.