RAAGI SEMIYA / ராகி சேமியா
- Holistic Breakfast Food.
- Supplies Essential Amino Acids.
- Supports A Gluten-Free Diet.
- Fortifies Bone Density.
- Keeps Blood Sugar Levels In Check.
- Treats Anemia.
- Boosts Nervous System Function.
- Augments Heart Health.
- Ragi is best for weight loss. Make ragi balls and substitute this for rice. You will soon notice the difference.
- Ragi cherry is one of the best semi-solid foods that you give your kid before you get him used to solid food. It’s the best baby food in India to give make kids strong.
- Ragi is also a rich source of fiber and helps lower cholesterol level.
- Ragi is best food for weight control, diabetes and a cooling the body.
- Holistic Breakfast Food.
- Supplies Essential Amino Acids.
- Supports A Gluten-Free Diet.
- Fortifies Bone Density.
- Keeps Blood Sugar Levels In Check.
- Treats Anemia.
- Boosts Nervous System Function.
- Augments Heart Health.
பிறந்த குழந்தை முதல் 90 வயது பெரியவர் வரைக்கும் அனைவரும் சாப்பிடக்கூடிய உணவுப்பொருள் இது. குறைந்த விலையில் கிடைக்கும் இதன் மகத்துவத்தும், மருத்துவ குணங்களின் பட்டியலோ வெகு நீளம். இவ்வளவு சத்துள்ள நம் பாரம்பர்ய உணவு, ஆடி மாதத்திலும் அம்மன் திருவிழாக்களிலும் கூழாகப் படைக்கப்பட்டு, அனைவருக்கும் விநியோகிக்கப்படுகிறது. சரி... இதைச் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? பார்க்கலாமா?
எலும்புக்கு வலிமை சேர்க்கும்!
எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் சத்து மிக அவசியம். கேழ்வரகில் மற்ற தானியங்கள், அரிசி போன்றவற்றைவிட அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது. வயதானவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற (மெனோபாஸ்) பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) ஏற்படாமல் தடுக்க இது உதவும்
உடல் எடை குறைக்க உதவும்!
இதில் உள்ள ட்ரிப்டோபான் (Tryptophan) அமினோ அமிலம் பசியைக் கட்டுப்படுத்தும். அதனால், குறைவாகச் சாப்பிட்டாலே வயிறு நிரம்பியதுபோன்ற உணர்வு ஏற்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது மிகப் பொருத்தமான உணவு.
சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து!
அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்துகொண்டது. இது, லோ கிளைசெமிக் இண்டெக்ஸ் (Low Glycaemic Index Food) உணவு வகையைச் சேர்ந்தது. அதாவது, இதை உண்ட பின்னர் ரத்தத்தில் உடனடியாக சர்க்கரை அளவு அதிகரிக்காது. கேழ்வரகைக் கூழாகக் குடிப்பதைவிட, களியாகவோ, ரொட்டியாகவோ உண்பது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
கொழுப்பைக் குறைக்கும்!
உடலின் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக, இதில் உள்ள லெசித்தின் (Lecithin), மெத்தியோனின் ( Methionine) போன்ற அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மைகொண்டவை.
ரத்தச்சோகை வராமல் தடுக்கும்!
ராகியில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும்; ரத்தச்சோகை வராமல் தடுக்கும். எனவே, இது ரத்தசோகை, உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்து