PANJU THIRI / பஞ்சு திரி
ஒரு முறை விளக்கு ஏற்றப் பயன்படும் திரியை, மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இன்று பலரும் இதை தான் செய்து வருகின்றனர். தீபத்தில் இருக்கும் திரியானது கருகி விடாமல் பார்த்துக் கொள்வது நம்முடைய கடமையாகும். தீபத் திரியானது கருகிப் போகும் பொழுது, வீட்டில் தேவையில்லாத மன சஞ்சலங்களும், சண்டை சச்சரவுகளும் ஏற்படும் என்பது பலருடைய நம்பிக்கை.
ஒரு முறை விளக்கு ஏற்றப் பயன்படும் திரியை, மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இன்று பலரும் இதை தான் செய்து வருகின்றனர். தீபத்தில் இருக்கும் திரியானது கருகி விடாமல் பார்த்துக் கொள்வது நம்முடைய கடமையாகும். தீபத் திரியானது கருகிப் போகும் பொழுது, வீட்டில் தேவையில்லாத மன சஞ்சலங்களும், சண்டை சச்சரவுகளும் ஏற்படும் என்பது பலருடைய நம்பிக்கை. இதனால் திரி எரியும் முன்பு தீபத்தை அமர்த்துவது நல்லது என்றும் கூறப்படுகிறது. அதுபோல் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தீபத்தில் இருக்கும் திரியை ஒரு பொழுதும் எடுத்து குப்பையில் வீச கூடாது. தீபத்தில் எரியும் திரியை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் திருஷ்டி கழிக்க பயன்படுத்தும் நெருப்பில் போட்டு இந்த திரிகளை எரித்து விடலாம். திரியை பச்சை நிறமாகும் வரை விளக்கில் அப்படியே வைத்திருக்கவும் கூடாது. இது தரித்திரத்தை ஏற்படுத்தும். விளக்கில் இருக்கும் எண்ணெய் அல்லது திரியானது நிறம் மாறும் முன்பே சுத்தம் செய்து விட வேண்டும்.
விளக்கில் எரிந்து கொண்டிருக்கும் திரியை கைகள் வைத்து அணைக்க கூடாது. தீபத்தை வாயால் ஊதி அணைக்கக் கூடாது. புஷ்பத்தை வைத்து தீபத்தை அணைக்கலாம், அல்லது வத்திக்குச்சி வைத்து எண்ணெயில் மூழ்கும்படி தள்ளிவிட்டும் தீப ஜோதியை அணைத்து விடலாம். நீங்கள் எடுத்து வைத்திருக்கும் திரியை ஒரு பாலிதீன் பையில் சேகரித்துக் கொள்ளுங்கள். அதனை எரிந்த கொட்டாங்குச்சி தணலில் போட்டு வெள்ளிக் கிழமைகளில் சம்பிராணியும் போட்டுக் கொள்ளலாம்.