PANJA DEEPA OIL / பஞ்ச தீப எண்ணெய்
வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசுநெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்தும் கலந்ததுதான் பஞ்சதீப எண்ணெய். பஞ்சமி திதியன்று, பஞ்சதீப எண்ணெய் ஊற்றி, ஐந்து முக விளக்கேற்றி வழிபட்டால், இறையருள் பரிப்பூரணமாகக் கிடைக்கும்.
- Peace :- Gingelly Oil (Nallennai, Sesame Oil) 35%
- Fame :- Castor Oil (Vilakkennai) 15%
- Wealth :- Neem Oil (Veppennai) 10%
- Debt Free :- Mahua Oil (Iluppai ennai) 20%
- Prosperity :- Cow's Ghee (Pasu nei) 20%
அமைதி: நல்லெண்ணெய் - 35%
புகழ்: விளக்கெண்ணெய் - 15%
செல்வம்: வேப்ப எண்ணெய் - 10%
கடன் : இலுப்பாய் எண்ணெய் - 20%
செழிப்பு: பசுவின் நெய் - 20%
வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசுநெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்தும் கலந்ததுதான் பஞ்சதீப எண்ணெய். பஞ்சமி திதியன்று, பஞ்சதீப எண்ணெய் ஊற்றி, ஐந்து முக விளக்கேற்றி வழிபட்டால், இறையருள் பரிப்பூரணமாகக் கிடைக்கும். நான்கு முக தீபம் ஏற்றி வழிபட்டால், பசு பூமி போன்ற செல்வங்களைத் தரும். மூன்று முக தீபம் ஏற்றி வழிபட்டால், புத்திர சுகம் கிடைக்கும். இரண்டு முக தீபம் ஏற்ற குடும்ப ஒற்றுமை பெருகும் என்றும், ஒரு முக தீபம் ஏற்றுவதால், மத்திமமான பலன்கள் கிடைக்கும் என்பார்கள். இப்படி அவரவரின் தேவைகளுக்கேற்ப விளக்கை ஏற்றலாம்.
அமாவாசை, பெளர்ணமி அன்றும் செவ்வாய், வெள்ளி போன்ற தினங்களிலும் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இந்த எண்ணெயில் விளக்கேற்றுவது சிறந்த பலனைத் தரும்.