Palm Sugar Powder - Karupatty Sarkarai - vayalveli
கருப்பட்டி சர்க்கரை
கருப்பட்டி சர்க்கரை ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும்.
கருப்பட்டி சர்க்கரை தொடர்ந்து சாப்பிடுவதால் மேனி பளபளப்பு பெறும்.
வெள்ளை சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம். நமக்குத் தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது.
பருவம் அடைந்த பெண்கள் கருப்பட்டி கலந்த உளுந்தங்களி சாப்பிடுவதால் அவர்கள் இடுப்பு எலும்புகள் வலிமை பெரும் மேலும் கருப்பை வலிமை பெரும்.
கருப்பட்டி சர்க்கரை (Palm Jaggery Powder) தயாரிக்கும் முறை:
பனைமர பதநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி(Palm Jaggery) கிடைக்கும். நமக்கு தேவையான வடிவில் செய்து கொள்ளலாம். தேவையான நேரத்த்தில் சேர்த்துவைத்துள்ள கருப்பட்டிகளை நமது பாரம்பரிய முறைப்படி உடைத்து, காய்ச்சி கைதேர்ந்த நபர்கள் மூலம் பதமான சுவைமிகுந்த பனை கருப்பட்டி சர்க்கரை தயார்.
பயன்கள்
கருப்பட்டி சர்க்கரை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் சுறுசுறுப்படையும், தோல் பளபளப்பு அடையும், ரத்தம் சுத்தம் ஆகும், தேவையான கால்சியம் கிடைக்கும், எலும்புகள் உறுதிபெறும், இதில் குளுகோஸ் நிறைந்துள்ளதால் மெலிந்த உடலை சீராக்கும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்கிறது. மேலும் உடலில் உள்ள பித்தத்தை நீக்குகிறது…
எனவே பக்கவிளைவுகளை தரக்கூடிய வெள்ளை சீனிக்கு ஒரு சிறந்த மாற்றாக கருப்பட்டியை சர்க்கரை பயன்படுத்தி பல பலன்களை பெறலாம்.