NEEM OIL / வேப்ப எண்ணெய்
* காயங்கள், தழும்புகள் உடலில் அடிபடும் போது ரத்த காயங்கள் ஏற்படுகின்றன. இந்த ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை வேப்ப எண்ணெய் கொண்டுள்ளது.
* பாத நோய்கள் மழைக்காலங்களில் சேற்றில் இருக்கும் கிருமிகளின்தொற்று சிலருக்கு ஏற்படுவதால் சேற்றுபுண்கள் ஏற்படுகின்றன. ஷூ காலணிகள் அதிகம் உபயோகிப்பவர்களுக்கு பாதங்களில் கிருமி தொற்று ஏற்பட்டு படர் தாமரை போன்றவை ஏற்படுகின்றன. இவற்றை சீக்கிரம் குணமாக்க தினமும் சிறிது வேப்ப எண்ணையை மேற்கூறிய இடங்களில் தடவி வந்தால் போதும்.
வேப்ப எண்ணெயில் நிம்பிடின், பூஞ்சை காளான், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன. இந்த பண்புகள் தலையில் உள்ள பொடுகு மற்றும் நமைச்சல்களை நீக்க சிறந்த தீர்வாக அமையும்.
தோல் சுருக்கம் வயது அதிகரிக்கும் போது நமது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது இயல்பானது. வேப்ப எண்ணையில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் கரட்டினாய்டு சத்துகள் அதிகம் இருக்கின்றன. வேப்ப எண்ணையை வாரத்திற்கு ஒரு முறை தோலில் நன்கு தடவிய பின்பு குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.
காயங்கள், தழும்புகள் உடலில் அடிபடும் போது ரத்த காயங்கள் ஏற்படுகின்றன. இந்த ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை வேப்ப எண்ணெய் கொண்டுள்ளது. காயங்களில் கிருமி தோற்று ஏற்படுவதையும் தடுத்து, காயங்களை சீக்கிரம் ஆற்றுகிறது. காயங்களால் உடலில் அழுத்தமான தழும்புகள் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து அந்த இடங்களில் வேப்ப எண்ணையை தடவுவது நல்லது.
பாத நோய்கள் மழைக்காலங்களில் சேற்றில் இருக்கும் கிருமிகளின்தொற்று சிலருக்கு ஏற்படுவதால் சேற்றுபுண்கள் ஏற்படுகின்றன. ஷூ காலணிகள் அதிகம் உபயோகிப்பவர்களுக்கு பாதங்களில் கிருமி தொற்று ஏற்பட்டு படர் தாமரை போன்றவை ஏற்படுகின்றன. இவற்றை சீக்கிரம் குணமாக்க தினமும் சிறிது வேப்ப எண்ணையை மேற்கூறிய இடங்களில் தடவி வந்தால் போதும். வயிற்று கிருமிகள் இனிப்புகளை அதிகம் சாப்பிடும் குழந்தைகளில் பலருக்கும் அவர்களின் வயிறு மற்றும் குடல்களில் பூச்சி தொல்லைகள் ஏற்படக்கூடும். இதற்கு நவீன மருந்துகளை எடுத்துக்கொண்டாலும். அரை டீஸ்பூன் அளவு வேப்ப எண்ணையை இந்த பிரச்சனை இருக்கும் குழந்தைகளை குடிக்க வைத்து விட்டால் அவர்களின் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்து, அவர்கள் மலம் கழிக்கும் போது அனைத்தும் வெளியேறிவிடும்.