KAMBU DOSAI MIX / கம்பு தோசை மிக்ஸ்
நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் எளிதில் செரிமானம் அடைய வேண்டும். கம்பு நார்சத்து அதிகம் கொண்டதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் மற்றும் புண்கள் கொண்டவர்கள் தொடர்ந்து சில காலம் உண்டு வருவதால் வயிறு சம்பந்தமான அத்தனை குறைபாடுகளையும் நீக்கும்.
Kambu has 8 times Iron content higher than in Rice. The rich Iron content in Kambu aids in improving the hemoglobin level in the blood and prevents anemia. It is also rich in fiber, protein, minerals such as magnesium, zinc, manganese, folic acid, amino acids, lecithin, potassium, B complex vitamins, and calcium.
கம்பு பயன்கள் :
உடல் பலம் கம்பு பல அத்தியாவசிய சத்துகள் நிறைந்த உணவாகும். இதை தினந்தோறும் காலையில் கூழ் அல்லது களியாக சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்புகள் தங்குவதை தடுத்து, தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை தந்து, உடல் பலத்தை பெருக்கும்.
நீரிழிவு நோய் தாக்கம் கொண்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் அதிகமுள்ள அரிசி போன்றவற்றை சாப்பிடமுடியாது. அந்த அரிசிக்கு மாற்றாக தினமும் கம்பு கூழ், களி, தோசை போன்றவற்றை செய்து சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இழந்த உடல்சக்திகளை மீண்டும் தர வல்லது இந்த கம்பு.
சிறுதானியமான கம்பில் பல உடலுக்கு தேவையான சத்துகளும், வேதிப்பொருள்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த கம்பை தொடர்ந்து உணவாக கொள்பவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு திறன் மேம்பாட்டு உடலை பல நோய்களின் தாக்கத்திலிருந்து காக்கிறது