KADALAI PARUPPU / கடலை பருப்பு

₹58.00 ₹58.00
In stock
SKU
500g-511

தினமும் கடலை பருப்பை இரவு முழுவதும் ஊற வைத்து, சிறிது முளை கட்டியதும், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவு குறையும். இதனால் உடல் ஆரோக்கியம் பெறும்.

 

Bengal gram, closely related to the chickpea family, is a yellow lentil, rounded on one side and flat on the other.
Bengal gram is one of the earliest cultivated legumes. In Indian cuisine, it is popularly known as Chana Dal.

Bengal gram seeds are small and dark and have a rough coat. It is majorly cultivated in India, Pakistan, Bangladesh, Iran and Mexico.
In the Indian vegetarian culinary scenario, bengal gram is a major ingredient. It is essentially used in making curries. In the southern India, unripe grams are picked and consumed as snack and the leaves are added in the making of salads.

Nutritional Value

1. Since bengal gram is a protein-rich supplement, it is considered a popular alternative for animal or meat protein.
2. Regular consumption of bengal gram helps in reducing protein malnutrition.
3. It also helps in lowering the cholesterol level in the bloodstream.
4. Chana dal is good for diabetic patients as it has a low glycaemic index.

Did you know?

Bengal gram reduces hair fall making the hair healthy.
India is one of the leading countries in cultivating bengal gram.

கடலைப்பருப்பில் உள்ள சத்துக்கள்

 

கடலை பருப்பில் புரதம், தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் C ஆகியவை காணப்படுகின்றன. இதில் நார் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளது.

 

இந்தியாவில் மட்டும் 9௦ மில்லியன் டன்கள் கடலை பருப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது. சில நாடுகளில் கடலை பருப்பை வறுத்து, காபி மற்றும் தேயிலைக்கு பதிலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த கடலை பருப்பின் செடிகள் மற்றும் இலைகள் நீல சாயம் தயாரிக்க பயன்படுகிறது.

 

கடலை பருப்பின் ஆரோக்கிய பயன்கள்

1. நீரழிவு நோயை கட்டுப்படுத்தும்

கடலை பருப்பில் அதிகம் நார் சத்து நிறைந்துள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரை சேரும் தன்மையை குறைகின்றது. இதனால் நீரழிவு நோய் ஏற்படும் வாய்ப்பும் குறைகின்றது. மேலும் நார் சத்து பசி இன்மையை ஏற்படுத்தும். இதனால் அதிகம் சாப்பிடுவது குறைந்து உடல் பருமன் ஏற்படுவதை தவிர்க்கும்.

2. கொழுப்பை குறைக்கும்

தினமும் கடலை பருப்பை இரவு முழுவதும் ஊற வைத்து, சிறிது முளை கட்டியதும், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவு குறையும். இதனால் உடல் ஆரோக்கியம் பெறும்.

3. இதய ஆரோக்கியம் மேம்படும்

கடலை பருப்பில் ‘லேக்யுமெஸ்’ என்னும் பொருள் இருப்பதால், இருதய நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் மிகக் குறைவு. மேலும் இதில் நிறைந்திருக்கும் வைட்டமின்கள், தாது பொருட்கள் மற்றும் நார் சத்து, உடல் ஆரோகியத்தையும், இருதய ஆரோகியத்தையும் மேம்படுத்துகின்றது.

4. இரத்த அழுத்தத்தை சீர் செய்யும்

கடலை பருப்பில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது குறைந்த இரத்த அழுத்தத்தை சரி செய்ய பயன்படுகின்றது. இதனால் இதயமும் உறுதி அடைகின்றது.

Write Your Own Review
You're reviewing:KADALAI PARUPPU / கடலை பருப்பு
Your Rating