INGI POONDU PICKLE / இஞ்சி பூண்டு ஊறுகாய்
பூண்டில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்ககள் நிறைய உள்ளது. இந்த காரணத்திற்காக இது நன்கு அறியப்பட்டதாகும். மேலும், உணவில் பூண்டு சேர்ப்பது ஓர் விதமான நல்ல நறுமணத்தை தரும்.
ஜின்ஜரால் எனப்படும் சுறுசுறுப்பான காம்பௌண்ட் ஆல் இஞ்சி செறிவூட்டப்படுகிறது. இது வலி நிவாரணி, மயக்க மருந்து, ஆண்டிபிரைடிக் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது; ஜிங்ஜரோன் எனப்படும் மற்றொரு காம்போனென்ட் ஒரு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் என்று டி.கே. பப்ளிஷிங்கின் 'ஹீலிங் ஃபுட்ஸ்' புத்தகத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, இது செரிமானத்திற்கும் உதவுகிறது; குடல்-ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது; மற்றும் மூட்டு வலியை குறைக்கிறது. மேலும் இது, காய்ச்சல் சளி மற்றும் இருமல் போன்றவற்றுடன் போராடுவதாக அறியப்படுகிறது.
பூண்டில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்ககள் நிறைய உள்ளது. இந்த காரணத்திற்காக இது நன்கு அறியப்பட்டதாகும். மேலும், உணவில் பூண்டு சேர்ப்பது ஓர் விதமான நல்ல நறுமணத்தை தரும். டெல்லியைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரும் எடை குறைப்பு ஆலோசகருமான டாக்டர் சிம்ரன் சைனி அவர்கள், "பூண்டு கந்தகத்தில் அதிகம் உள்ளது மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகளைக் கொண்டுள்ளது . மற்றும் இது சிறந்த செரிமானத்தை ஊக்குவிப்பதாகவும், நம் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் பயன்படுகிறது என்று கூறினார்கள். மேலும் இது ஜலதோஷத்தைத் தடுக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது.